சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் கழக உலகக் கிண்ணத் தொடருக்கான இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் குழாமில் மத்தியகளவீரரான ஜக் கிரேலிஷ் இடம்பெறவில்லை.
இதேவேளை சிற்றியின் குழாமில் பின்களவீரரான கைல் வோக்கரும் இடம்பெறவில்லை.
இந்நிலையில் இன்னொரு பிறீமியர் லீக் கழகமான செல்சியின் குழாமில் முன்களவீரர்களான ரஹீம் ஸ்டேர்லிங்க், ஜோவா பீலிக்ஸ் ஆகியோரும் பின்களவீரரான பென் சில்வெல்லும் குழாமில் இடம்பெறவில்லை.