17.5 C
Scarborough

களவாடப்பட்ட ஐ.பி.எல் டீ ஷட்டுக்கள்

Must read

மும்பையில் அமைந்துள்ள வான்கடே மைதானத்தில் உள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அலுவலகத்தில் இருந்து 2.26 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 2025 ஐ.பி.எல்.டீ ஷட்டுக்கள் திருடப்பட்டுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த கொள்ளை சம்பவத்திற்கு 40 வயதுடைய பாதுகாவலர் ஒருவர் தான் காரணம் என்றும், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த நபர் சுமார் 2500 ரூபாய் மதிப்புள்ள 261 .டீ ஷட்டுக்களைத் களவாடி சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இணையவழி சூதாட்ட அடிமைத்தனத்திற்கு நிதி திரட்டுவதற்காக அவற்றைத் திருடியதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.டீ ஷட்டுக்கள் வெவ்வேறு அணிகளுக்குச் சொந்தமானவை என்றாலும், அவை வீரர்களுக்கானதா அல்லது பொதுமக்களுக்கானதா என்பது உறுதியாகத் தெரியவில்லை. குறித்த .டீ ஷட்டுக்களை ஹரியானாவைச் சேர்ந்த ஒரு ஒன்லைன் தரகருக்கு விற்பனை செய்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article