கர்நாடகா அரசு தயாரித்து வரும் மைசூர் சாண்டல் சவர்காரத்துக்கான விளம்பர தூதராக நடிகை தமன்னா நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தமன்னாவுக்கு இந்திய மதிப்பில் ரூ. 6 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
மைசூர் சாண்டல் சவர்கார உற்பத்தி கர்நாடக அரசாங்கத்துக்கு பாரிய வருமானத்தை ஈட்டி தரும் நிலையில் இதன் வர்த்தகத்தை பெரிதாக்குவதற்காக அகில இந்தியளவில் பிரபலமானவர்களை, அதன் விளம்பர தூதர்களாக நியமித்து வருகிறார்கள்.
இதற்கு முன்பு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி மைசூர் சாண்டல் சோப் விளம்பர தூதராக இருந்தார். அந்த வரிசையில் தீபிகா படுகோன், ராஷ்மிகா ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு நடிகை தமன்னாவை விளம்பர தூதராக நிறுவனம் நியமித்துள்ளது.