6.6 C
Scarborough

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல்; நிவாரணமும் அறிவிப்பு

Must read

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர்வரையில் உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா பிரதமர் நரேந்திர மோடி தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சனிக்கிழமை கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவியை தமிழக அரசு நேற்று அறிவித்தது. இதேபோல உயிரிழந்தவர்களுக்கு தவெக தலைவர் விஜய் ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். இந்நிலையில், பிரதமர் மோடியும் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், ‘தமிழகத்தின் கரூரில் நடைபெற்ற அரசியல் கட்சியின் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் துரதிருஷ்டவசமானது. இதில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் தலா ரூ.2 லட்சம் நிவாரணமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலையும் இரங்கலையும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article