சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘கருப்பு’ படத்தின் டீசர் இன்று (ஜூலை 23) வெளியாகியுள்ளது.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் படம் ‘கருப்பு’. இதில் சூர்யா உடன் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவாதா, யோகி பாபு, இந்த்ரன்ஸ், நட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்தப் படத்துக்கு பிரபல பாடகர் திப்புவின் மகன் சாய் அபயங்கர் இசை அமைக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு ஆகியோர் தயாரிக்கின்றனர்.
இந்நிலையில், சூர்யாவின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு ‘கருப்பு’ படத்தின் டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
மாஸான வசனங்களும் அதற்கேற்ற இசையும் டீசரில் வெளியாகியுள்ளன.