ஜப்பான் நாட்டின் யமகதா மாகாணம், ஹிகஷின் நகரில் உள்ள யமகதா விமான நிலையத்தில் விசித்தித்திரமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
ஜப்பானின் உள்நாட்டு விமான நிலையமான அங்கு தினமும் பல்வேறு நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், இந்த விமான நிலையத்தின் ஓடுதளத்திற்குள் கடந்த வியாழன் அன்று (26) கரடி புகுந்த நிலையில் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஓடுதளத்தில் கரடி சுற்றித்திரிந்ததால் விமானங்கள் புறப்பட முடியாமலும். தரையிறங்க முடியாமலும் திணறின. இதனால். 10க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. விமான சேவை தற்காலிமகாக நிறுத்தப்பட்டது. பின்னர், விமான நிலையத்திற்கு அருகே இருந்த வனப்பகுதிக்குள் கரடி சென்றதாக கூறப்படுகிறது.