கனடாவின் ரொறன்ரோ கிழக்கு பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக புலனாய்வாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்த பெண்ணுக்கு முதற்கட்ட மருத்துவ உதவி வழங்கப்பட்டபோதிலும், அவருடைய உயிரை காப்பாற்ற முடியவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் பொதுமக்களின் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.