கனடாவுக்குச் செல்வதற்காக முகவர் ஒருவரிடம் 9 லட்ச ரூபாய் செலுத்திய நிலையில், குறித்த முகவர் ஏமாற்றியதால் இந்தியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள மோகா என்னுமிடத்தைச் சேர்ந்த ககன்தீப் சிங் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த முகவர்களான ஷிஃபு கோயல் மற்றும் அவரது மனைவியான ரீனா கோயல் ஆகியோரிடம், தன்னைக் கனடாவுக்கு அனுப்ப உதவுமாறு கோரியுள்ளார் சிங்.
இதற்காக 9 இலட்சம் ரூபாய் செலவாகும் என அவர்கள் தெரிவித்ததோடு அவருக்கு கடன் கொடுக்க நபர் ஒருவரை குறித்த தம்பதியர் ஏற்பாடு செய்துள்ளனர்.
இதற்கமைய, தீப் பைனான்ஸ் என்னும் நிறுவனம் , ககன்தீப் சிங்குக்கு 9 லட்ச ரூபாய் கடன் கொடுக்க, அந்த பணத்தை சிங் கோயல் தம்பதியரின் கணக்குக்கு அனுப்பியுள்ளார்.
ஆனால், தன் மகனை கோயல் தம்பதியர் கனடாவுக்கு அனுப்பவும் இல்லை, கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுக்கவும் இல்லை என சிங்கின் தாயாகிய ஹர்ஜீத் கௌர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், குறித்த பைனான்ஸ் நிறுவனம் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுக்குமாறு சிங்கை நிர்ப்பந்திக்க, மன உளைச்சலுக்காளான சிங் கடந்த, அக்டோபர் மாதம் 7ஆம் திகதி,தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து சிங்கின் தாய் இது தொடர்பில் பொலிசில் புகாரளித்துள்ளார்.
கோயல் தம்பதியர் மற்றும் பைனான்சியர் அலுவாலியா மீது பொலிசார் முறைபாடு செய்துள்ளனர்.

