15 C
Scarborough

கனடாவும் அமெரிக்காவும் மந்தநிலையை நோக்கிச் செல்கின்றன – முன்னாள் ஆளுநர்!

Must read

வரிகள், புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றின் பின்னணியில் கனடாவும் அமெரிக்காவும் மந்தநிலையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக Bank of Canada முன்னாள் ஆளுநர் Stephen Poloz எச்சரிக்கிறார்.

செவ்வாயன்று செய்தி நிறுவனமொன்றிற்கு அளித்த பேட்டியில், கனடா மற்றும் அமெரிக்கா இரண்டிற்கும் பொருளாதாரப் பாதை சாதகமானதல்ல என்று Poloz கூறினார். நமக்கு இரண்டு பொருளாதாரங்கள் உள்ளன, உண்மையில், அவை சரிந்து கொண்டிருக்கின்றன, மந்தநிலையில் இல்லை என்றாலும் அந்த திசையில் சென்று கொண்டிருக்கின்றன என்று அவர் கூறினார்.

தொழிலாளர் சந்தை எண்களில் மந்தநிலை தெரியும் என்று Poloz கூறினார். August மாதத்தில் பொருளாதாரம் 66,000 வேலை வாய்ப்புக்களை இழந்ததால் கனடாவின் வேலையின்மை விகிதம் 7.1 சதவீதமாக உயர்ந்தது. தொற்றுநோய் காலத்தைத் தவிர May 2016 க்குப் பின்னர் இது மிக உயர்ந்த வீதமாகும்.

இளைஞர் வேலையின்மை 14.5 சதவீதமாக உயர்ந்துள்ளது, இது தேசிய விகிதத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும், இது மிகவும் கவலையளிக்கிறது என்று அவர் கூறுகிறார், இவற்றில் செயற்கை நுண்ணறிவு ஒரு செல்வாக்கைக் கொண்டிருக்கக்கூடும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். அடிப்படையில், பொருளாதாரத்தின் முதுகெலும்பு பலவீனமடைந்து வருகிறது ஆனாலும் நுகர்வில் குறைவு ஏற்படவில்லை என்று நம்பிக்கை வெளியிடும் Poloz, சில்லறை விற்பனைகளும் மிகவும் உற்சாகமாகவே உள்ளது என்கிறார்.

கனடாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார கொந்தளிப்பின் அளவை அமெரிக்கா உணரவில்லை என்றாலும், வீட்டுவசதி மற்றும் தொழிலாளர் சந்தைகள் மோசமாகச் செயற்படுவதால், பொருளாதார வீழ்ச்சிக்கான அறிகுறிகள் இருப்பதாக Poloz கூறுகிறார். நுகர்வுச் செலவுகள் தற்போது நிலைத்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார், ஆனால் அது அடுத்த வருடம் வீழ்ச்சியடையும் என்றும் எச்சரிக்கின்றார்.

நிர்வாகம் நிலைமையை சிறிது மாற்றக்கூடும் என்று நாங்கள் அனைவரும் கனவு கண்டோம், ஆனால் இப்போது எனக்கு அது குறித்து நம்பிக்கை குறைவாகவே உள்ளது என்று கூறிய Poloz, இங்குள்ள வணிகங்களின் அடிப்படையில் நம்மை எதிர்கொள்ளும் இந்த புதிய உலகத்திற்கு ஏற்ப நாம் தயாராக வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article