கனடாவில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் மீண்டும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
15 ஆண்டுகளுக்கு முன்பு சென் கேதரின்ஸில் இடம்பெற்ற வீட்டு தீ விபத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்த ஒரு பெண்ணின் கொலை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
2010 ஆகஸ்ட் 4ம் திகதி ஓக்வுட் அவென்யூவில் உள்ள லிவியா பெயர்ன்ஸ் என்பவரின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு வீரர்களுக்கு அழைப்பு வந்தது.
கனடாவில் 15 ஆண்டுகளுக்கு முன் இடம்பெற்ற கொலை குறித்து விசாரணை | Niagara Police Seek Publics Help In Unsolvedmurder
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்த போது பெயர்ன்ஸ் அடித்தளத்தில் இருந்து உதவி கோரி கூச்சலிட்டதை கேட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீட்டில் பெயர்ன்ஸ் என் பெண் கட்டப்பட்ட நிலையில் இருந்ததை பொலிஸார் கண்டுள்ளனர்.
கறித்த பெண்ணை மீட்ட தீயணைப்புப் படையினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், ஆனால் மறுநாள் உயிரிழந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பெயர்ன்ஸ் என்ற உயரிழந்த பெண்ணுக்கு அப்போது 76 வயது என பொலிஸார் தெரிவித்தனர்.
பெயர்ன்ஸை கட்டுவதற்கான பயன்படுத்திய டேப் வைகயானது சில்லறை கடைகளில் கிடைக்காதவை எனவும், கொலையாளி இதனை எடுத்து வந்து கட்டியுள்ளதாகவும் பொலிஸார் ஊகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.