கனடாவில் கடந்த ஜூலை மாதத்தில் சுமார் 41,000 வேலை வாய்ப்புக்கள் இழக்கப்பட்டுள்ளதாகவும், ஜூன் மாதத்தில் 83,000 பணியிடங்கள் அதிகரித்த நிலையில் வேலை வாய்ப்புக்களை ஓரளவு ஈடுசெய்ததாகவும் கனடா புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
வேலையின்மை விகிதம் கடந்த மாதம் 6.9 சதவீதமாக நிலையாக இருந்தது, ஏனெனில் மொத்த வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை பெரியளவில் மற்றம் இல்லை என்று திணைக்களம் கூறுகிறது.
தனியார் துறைகளில் இளைஞர்கள் அதிகளவில் இந்த தொழில் வாய்ப்பு இழப்புக்களை எதிர்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதத்தில் 51,000 முழுநேர வேலை வாய்ப்புக்கள் இழக்கப்பட்டதாகவும் மேலும் இந்த இழப்புகளின் பெரும்பகுதி தனியார் துறையில் இருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வரி விதிப்பினால் சில தொழில் துறைகள் நெருக்கடியை எதிர்க்கநோக்கியுள்ள நிலையில் வேலை வாய்ப்புக்கள் கடந்த மாதத்தில் குறைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.