இதனால் உணவுக்கான செலவு அதிகரித்துள்ளது. மக்கள் மாற்று உணவை தேடும் நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
2020-ஆம் ஆண்டில் 10 டொலராக இருந்த ஒரு கிலோ மாட்டிறைச்சி இப்போது சராசரியாக 13 டொலராக உள்ளது. Statistics Canada-வின் கூற்றுப்படி, இப்போது ஒரு சர்லோயின் ஸ்டீக் சராசரியாக 22 டொலர் ஆகும். அனால் இது 2016-இல் 16 டொலருக்கு கீழ் இருந்தது.
வறட்சி காரணமாக புல் விலை அதிகரித்து, மாட்டுவளர்ப்பு தொழில் பாரிய பாதிப்பை சந்தித்துள்ளது.அதிக செலவுடைய மாடுகளை விற்க சிலர் முடிவெடுத்தனர். சிலர் மாட்டுவளர்ப்பு தொழிலை விட்டு வெளியேற தொடங்கிவிட்டனர்.
கால்நடைகளிடையே காய்ச்சல் போன்ற தாக்கங்களும் இதற்குக் காரணமாகின்றன.மாற்று தொழில் நோக்கங்கள்: விலை உயர்வால் சில பசு வளர்ப்பாளர்கள் மாடுகளை விற்க முடிவு செய்தனர்.