கனடாவின், லண்டன் நகர மையத்தில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததாக லண்டன் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கோல்போர்ன் தெரு மற்றும் பிரின்ஸஸ் அவென்யூ சந்திப்பில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணியளவில், இரு ஆண்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்து அவசர சேவைகளுக்கு அழைப்பு வந்ததாக லண்டன் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெஃப் ஓர்ட்ரோனோ தெரிவித்துள்ளார்.
ஒரு ஆண் கடுமையான உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் இருப்பதைக் கண்டதாக தெரிவித்துள்ளார்.
அந்த ஆண் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் விக்டோரியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் எனவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் எனவும் தெரிவித்துள்ளார்.
லண்டன் பொலிஸ் சேவை ஒரு சந்தேக நபர் காவலில் உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. அடையாளம் வெளியிட விரும்பாத பல சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பான சமூகத்திற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். லண்டன் மக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்கிறோம், மேலும் இதுபோன்ற சம்பவங்களை விசாரித்து பொறுப்புக்கூற வைப்பதற்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்,” என்று ஓர்ட்ரோனோ கூறியுள்ளார்.
விசாரணை தொடர்வதால் மேலதிக விவரங்கள் வழங்கப்படவில்லை. இருப்பினும், பயன்படுத்தப்பட்ட ஆயுதம் கத்தி என்பதை ஓர்ட்ரோனோ உறுதிப்படுத்தியுள்ளார்.