ஸ்கார்பரோவில் உள்ள ஒரு வீட்டில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 80 வயதுடைய பெண் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருவதாகவும் 18 வயதுக்கும் குறைந்த ஒருவர் காவலில் உள்ளதாகவும் டொரண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (22) ஷெப்பர்ட் அவென்யூ கிழக்கு மற்றும் மெக்கோவன் வீதி பகுதியில் உள்ள பிரவுன்ஸ்பிரிங் வீதி மற்றும் பிட்ஃபீல்ட் சாலைக்கு அருகிலுள்ள ஒரு வீட்டிற்கு மதியம் 1:30 மணியளவில் வந்ததாக டொரண்டோ பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் நடந்த இடத்திற்கு டொரண்டோ பொலிஸ் அதிகாரிகள் வந்து பாதிக்கப்பட்டவரை குறிப்பிடத்தக்க காயங்களுடன் கண்டுபிடித்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய செயல் ஆய்வாளர் பிரையன் மஸ்லோவ்ஸ்கி, 18 வயதுக்குட்பட்ட ஒரு சந்தேக நபர் சிறிது தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டார்.
“சந்தேக நபர் மற்றும் பாதிக்கப்பட்டவர் இருவரும் ஒரே வீட்டில் வசிப்பவர்கள் என தெரிவித்ததோடு “இது மிகவும் துயரமானது, எங்கள் எண்ணங்கள் குடும்பத்தினரை நோக்கிச் செல்கின்றன என கவலை தெரிவித்தார்.
கத்தி குத்துக்கான காரணத்தை அவர் வெளியிடவில்லை.