படம் ஒன்றை தானே இயக்கி முடித்துவிட்டு, நாயகனாக நடிக்க முடிவு செய்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.
லவ் டுடே படம் மூலம் இளைஞர்கள் மத்தியில் புகழ் பெற்ற பிரதீப் ரங்கநாதன்’எல்.ஐ.கே’ மற்றும் ‘ட்யூட்’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த இரண்டு படங்களின் இறுதிகட்டப் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து பல்வேறு இயக்குநர்கள் பிரதீப் ரங்கநாதனை நாயகனாக நடிக்க வைக்க கதைகள் கூற அணுகியிருக்கிறார்கள்.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தினை முடித்த பின்புதான் அடுத்து நடிக்கும் படங்களுக்கான கதைகள் கேட்க முடிவு செய்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.