19.9 C
Scarborough

கடையில் வாழைப்பழத்தை தொங்கவிட காரணம் என்ன?

Must read

கடைகளில் வாழைப்பழத்தை எதற்காக தொங்க விடுகின்றனர் என்ற காரணத்தை தற்போது தெரிந்து கொள்வோம்.

வாழைப்பழத்தில் பொட்டாசியம், விட்டமின் ஏ, விட்டமின் பி 6, விட்டமின் சி, நார்ச்சத்துக்கள், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது.

ஒரே ஒரு வாழைப்பழத்தில் மனித உடலில் சக்தி வாய்ந்த எலும்பு, தசைகளை உற்பத்தி செய்ய உதவுகிறது.

இந்த விட்டமின் சி, உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது. இது மூளை ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களை வைட்டமின் பி6 கொடுக்கிறது.

செரிமான ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களான நார்ச்சத்துக்கள் அடங்கியுள்ள நிலையில், ரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை காக்கவும் செய்கின்றது.

வாழைப்பழம் வெயிலில் கருக்காமல் இருப்பதற்கும், அடிப்பகுதி சேதம் அடையாமல் இருப்பதற்கு கடைகளில் தொங்க விட்டுள்ளனர் என்று தான் நாம் நினைத்திருப்போம்.

ஆனால் உண்மை என்னவெனில், வாழைப்பழத்தை கடைகளில் தொங்க விட்டு வைப்பதற்கான காரணம், வாழைப்பழத்தில் எத்திலீன் என்கிற கேஸ் இருக்கும் அந்த கேஸ் வெளியாவதால் தான் பழம் பழுக்க ஆரம்பிக்கிறது.

எனவே வாழைப்பழத்தை கீழே வைத்திருந்தால் ஒரே இடத்தில் அந்த எத்திலீன் கேஸ் வெளியாகி ஒரு சில பழங்கள் மட்டும் பழுக்கும்.

ஆனால் அதை தொங்க விட்டு வைத்திருந்தால் கேஸ் சமமாக எல்லா இடங்களிலும் வெளியாகி அனைத்து பழங்களும் பழுக்க ஆரம்பிக்கும்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article