“காதல் உலக மொழி என்றாலும் எல்லைகளும் சர்வதேச நீர்நிலைகளும் அதற்கு இன்னும் தடையாகவே இருக்கின்றன. இதை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச நிகழ்வு ஒன்றை வைத்து,‘18 மைல்ஸ்’ படம் உருவாகி இருக்கிறது என அந்த படத்தின் இயக்குனர் சதீஸ் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
இது ஒரு கடலோர காதல் கதை, காதலர்கள் இந்தப் படத்துடன் இணைவார்கள் என்று நம்புகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
அசோக் செல்வன், மிர்னா நடிப்பில் உருவாகும் படம், இந்தப் படத்துக்கு கே.எழில் அரசு ஒளிப்பதிவு செய்கிறார். சித்து குமார் இசையமைக்கிறார்.