கடந்த வியாழக்கிழமை இரவு 11:30 மணியளவில் உதவி கோரிய அழைப்பிற்கு பதில் வழங்கியதோடு அங்கு விரைந்ததாக கேப் பிரெட்டன் பிராந்திய காவல்துறை தெரிவித்துள்ளது.
பிளக் பொயிண்ட் வீதியின் முடிவில் பாறையொன்றின் கீழே உள்ள கடற்கரைக்கு அதிகாரிகள் அனுப்பப்பட்ட நிலையில் கரையோரத்தில் கிடந்த நபரை கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து தீயணைப்பு சேவைகள் மூலம் அந்த நபரை வெளியே எடுத்த நிலையில் அவரை கேப் பிரெட்டன் பிராந்திய மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்,எவ்வாறாயினும் அதன் பின்னர் அவர் காயங்களால் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர், மேலும் அந்த நபரின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய பிரேத பரிசோதனை நடத்தப்பட உள்ளது.