பிரேசிலின் முன்னணி உதைபந்து வீரரும் ரியல் மாட்ரிட் கிளப்புக்காக ஆடியவருமான மார்செலோ (வயது 36) உதைபந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் பிரேசில் அணிக்காக 58 சர்வதேச போட்டிகளில் ஆடி அதில் 6 கோல்கள் அடித்துள்ளார்.
2007ஆம் ஆண்டு ஸ்பெயினில் உள்ள ரியல்மாட்ரிட் கிளப்பில் இணைந்த அவர் 16 சீசன்கள் விளையாடி உள்ளார். அந்த கிளப்புக்காக 6 முறை லா லிகா சம்பியன் கிண்ணம் மற்றும் 5 முறை சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வென்றதில் முக்கிய பங்கு வகித்துள்ளார். அந்த அணியின் தலைவராகவும் பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.