திரையரங்கில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘டிராகன்’ திரைப்படம் மார்ச் 21-ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது.
பிப்.21-ம் தேதி வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘டிராகன்’. ஏஜிஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இப்படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போதும் பல முன்னணி திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டு வருகிறது.
இப்படம் வெளியாகும் முன்னரே, ஃநெட்ப்ளிக்ஸ் நிறுவனம் இதன் ஓடிடி உரிமையினை கைப்பற்றி இருந்தது. ஆனால், எப்போது வெளியீடு என்பது தெரியாமல் இருந்தது. தற்போது மார்ச் 21-ம் தேதி ‘டிராகன்’ வெளியாகும் என்று ஃநெட்ப்ளிக்ஸ் அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘டிராகன்’ படத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர், மிஷ்கின், கே.எஸ்.ரவிக்குமார், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள இப்படத்துக்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.