பவன் கல்யாண் ஓஜி படத்தில் பிரியங்கா மோகன். நடிகர் இப்ரான் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்திருந்தனர். டிவிவி என்டெர்டெய்ன்மென்டின் டிவிவி தனய்யா இந்த படத்தை தயாரித்துள்ளார்.
படத்திற்கு தமன் இசை அமைத்துள்ளார். இந்த படம் கடந்த 25ஆம்திகதி வெளியானது பிரம்மாண்டமாக உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மூன்று நாட்களில் படம் உலக அளவில் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஓஜி படத்துக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் மிகவும் அர்த்தமுள்ள நினைவுகளில் சிறிய விஷயங்கள் எங்கள் படத்தின் மீது இவ்வளவு அன்பை பொழிவதற்கு அனைவருக்கும் நன்றி எங்கள் இதயங்கள் நன்றியால் நிரம்பி வழிகின்றன உங்கள் அருகில் உள்ள திரையரங்குகளில் ஓஜி படத்தை காணுங்கள் என பிரியங்கா மோகன் குறிப்பிட்டுள்ளார்.

