அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது.
இந்த போட்டியில் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.
இந்தியா தோல்வி கண்ட முதல் இரண்டு போட்டிகளிலும் விராட் கோலி டக் அவுட் ஆன நிலையில் ஒரு ஓட்டத்தையும் பெற முடியாமல் போனது. இந்த நிலையில் இன்று நடந்த மூன்றாவது போட்டியில் ஒரு ஓட்டத்தை பெற்றுவிட்ட விராட் கோலி சிரித்துக் கொண்டே அதனை கொண்டாடினார்.
முதல் இரண்டு போட்டிகளிலும் ஒரு ஓட்டத்தையும் பெறாத நிலையில் அவர் இதனை கொண்டாடியினார். இது தொடர்பான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

