இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் ஒப்பந்தப் பட்டியல்களில் கடந்த முறை இடம்பெறாத ஷ்ரேயாஸ் ஐயரும், இஷன் கிஷனும் இம்முறை இடம்பெற்றுள்ளனர்.
இதேவேளை புதிதாக நிதிஷ் குமார் ரெட்டி, துருவ் ஜுரேல், அபிஷேக் ஷர்மா, சஃப்ராஸ் கான், ஆகாஷ் டீப், வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ரானா ஆகியோருக்கு சி தரத்தில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த முறையிலிருந்து ஷர்துல் தாக்கூர், கே.எஸ். பாரத், ஆவேஷ் கான், ஜிதேஷ் ஷர்மா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
ஏ பிளஸ் – றோஹித் ஷர்மா, விராட் கோலி, ஜஸ்பிரிட் பும்ரா, இரவீந்திர ஜடேஜா
ஏ மைனஸ் – மொஹமட் சிராஜ், லோகேஷ் ராகுல், ஷுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, மொஹமட் ஷமி, றிஷப் பண்ட்
பி – சூரியகுமார் யாதவ், குல்தீப் யாதவ், அக்ஸர் பட்டேல், யஷஸ்வி ஜைஸ்வால், ஷ்ரேயாஸ் ஐயர்
சி – ரிங்கு சிங், திலக் வர்மா, ருத்துராஜ் கைகவாட், ஷிவம் டுபே, ரவி பிஷ்னோய், வொஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்டீப் சிங், பிரசீத் கிருஷ்ணா, ரஜாட் பட்டிடார், துருவ் ஜுரேல், சஃப்ராஸ் கான், நிதி குமார் ரெட்டி, இஷன் கிஷன், அபிஷேக் ஷர்மா, ஆகாஷ் டீப், வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ரானா