உள்ளூர் உற்பத்தியாளர்களை ஆதரிக்கும் வகையிலும் உலகளாவிய வர்த்தக பதட்டங்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கும் ஒன்ராறியோ அரசாங்கம் மதுபானங்கள், சைடர் மற்றும் பீர் உள்ளிட்ட மதுபானங்களின் மீதான வரிகளைக் குறைத்துள்ளது.
இந்த மாற்றங்களில் டிஸ்டில்லரிகள், மைக்ரோ ப்ரூவரி மற்றும் குடிக்கத் தயாராக உள்ள பானங்கள் ஆகியவற்றிற்கான குறிப்பிடத்தக்க வரி நிவாரணம் அடங்கும்.
இது உள்ளூர் வணிகங்கள் முன்னேற்றம் காணவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், மேலும் உள்ளூர் தயாரிப்புகளை சந்தைப்படுத்தவும் உதவும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.