ஒன்ராறியோவில் சமீபத்தில் பரவிய லெஜியோனேயர்ஸ், பக்டீரியா தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
லெஜியோனெல்லா பாக்டீரியாவால் ஏற்படும் இந்த நோய், கடுமையான நிமோனியா வடிவமாக வெளிப்படுகிறது. இதன் பொதுவான அறிகுறிகளாக காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை இனம் காணப்பட்டுள்ளன.
தொற்று நோய் மருத்துவர் டாக்டர் ஐசக் போகோச், பாக்டீரியா தொற்று நபருக்கு நபர் பரவாது என்றும் மண் நீர் போன்றவற்றில் இருந்தே இது பரவுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
இன்ஹேலர் போன்ற மனிதனால் உருவாக்கப்பட்ட அமைப்புகள் மூலம் அதை சுவாசிப்பதனால் மட்டுமே பாதிப்பு ஏற்பாடு மென அவர் குறிப்பிட்டுள்ளார்.
வயதானவர்கள் புகைப்பவர்கள் மாறும் நுரையீரல் நோய் உள்ளவர்களை இந்த தொற்று அதிகம் தாக்குவதாக வைத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.