15.1 C
Scarborough

ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டம் – நால்வர் கைது!

Must read

ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா, ஹிங்கோலி பகுதியில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் நடந்து வருவதாக ஜல்னா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றது.

இதில் முஸ்தகீம் சேக் என்பவர் கைத்தொலைபேசி மூலமாக சூதாட்டம் நடத்தி வந்ததாக தெரியவந்தது.

இதையடுத்து பொலிஸார்அவரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து 8 இலட்சத்து 53 ஆயிரம் ரூபா உட்பட பல பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் கைதான 4 பேரின் வங்கிக்கணக்கை முடக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article