9வது ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிச் சுற்று இன்று (04) ஆரம்பமாகிறது. அதன் படி இன்று டுபாயில் நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடாத்துகின்றன.
டுபாயில் நேற்று முன்தினம் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா – நியூஸிலாந்து அணிகள் மோதின. போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நியூஸிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு மொத்தம் 249 ரன்களை பெற்றது.
250 ரன்கள் என்ற இலக்குடன் அடுத்து இறங்கிய நியூஸிசிலாந்து அணி 45.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களும் இழந்து 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் படி குழு ஏ யில் இந்திய அணி தோல்வியுறாத அணியாக முதலிடத்தை பிடித்தது.
இந்நிலையில் இந்திய அணி இன்று அரையிறுதி ஆட்டத்தில் குழு பி யில் இரண்டாமிடத்தை பிடித்த அவுஸ்திரேலிய அணியுடன் மோதுகிறது. இதேவேளை நாளை (05) லாஹூரில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடாத்துகின்றன. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தொடரின் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. இதற்கான மைதானம் எது என்பது இந்திய அணியின் முடிவை பொறுத்து தங்கியுள்ளது.