தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இவர் நடிப்பில், மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘லூசிபர்’. இந்த படத்தின் மூலம் பிருத்விராஜ் இயக்குனராக அறிமுகமானார்.
தற்போது இந்த படத்தின் 2 ஆம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு ‘எல் 2 எம்புரான்’ என பெயரிடப்பட்டுள்ளது.இதில், மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
‘லூசிபர்’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளதால் இதன் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. டோவினோ தாமஸ் இப்படத்தில் ஜதின் ராம்தாஸ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் கதாபாத்திரங்களை நேற்று முதல் படக்குழு அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி, நேற்று காலை ஜெய்ஸ் ஜோஸின் அறிமுக போஸ்டரையும் மாலை, ஷிவதாவின் அறிமுக போஸ்டரையும் படக்குழு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், 34 ஆவது கதாபாத்திரமாக அனீஷ் ஜி மேனனின் அறிமுக போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, நடிகர் அனீஷ் ஜி மேனனின் இப்படத்தில் சுமேஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்