நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியனுக்கும் ஜகத் விதானவுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இதேவேளை உயிரிழந்த வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் முன்னதாக பாதுகாப்பு கோரி காவல்துறை மா அதிபர் மற்றும் பிரதி காவல்துறை மா அதிபருக்கு கடிதம் அனுப்பி இருந்ததாக அமைச்சர் தெரிவித்தார்.
அதன் பின்னர் அவருக்கு எவ்வாறு பாதுகாப்பு வழங்குவது என்பது குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் போது சிறந்த ஒருவரை தேர்வு செய்தால் அவர்களுக்கு எந்தவித அச்சமும் இன்றி காவல்துறை பாதுகாப்பை வழங்க முடியும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

