16.4 C
Scarborough

எம்புரான் படத்துக்கு தடை கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு

Must read

பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்திருக்கும் படம், ‘எல் 2: எம்புரான்’. இதில் மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் இதுவரை ரூ.200 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இதில் இடம்பெற்றுள்ள கலவரம் தொடர்பான காட்சிகள் குஜராத்தில் 2002-ல் நடந்த சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் இருப்பதாகவும், இந்துத்துவகொள்கைகளை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகவும் வலதுசாரி அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதையடுத்து மோகன் லால், தனது சமூக வலைதளப் பக்கத்தில் மன்னிப்புக் கோரி, சர்ச்சையான காட்சிகள் நீக்கப்படும் என்று கூறியிருந்தார். இந்நிலையில், மோகன்லாலுக்கு வழங்கப்பட்ட கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவியை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இதற்கிடையே இந்தப் படத்துக்குத் தடை விதிக்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் எர்ணாகுளத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி விஜேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகள் குஜராத் கலவரத்தை நினைவுபடுத்தும் விதமாக உள்ளன. இந்தப் படம், தேச விரோத விஷயங்களை ஊக்குவிப்பதாகவும் மாநிலத்தில் வகுப்புவாத வன்முறையைத் தூண்ட முயற்சிப்பதாகவும் தெரிவித் துள்ளார். இதற்கிடையே, இந்த வழக்கில். எம்புரான் படத்துக்கு இடைக்கால தடை விதிக்க கேரள உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article