ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க்கின் யாழ் வருகை தமக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை தமிழ் மக்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக நம்பிக்கை வெளியிட்டு வருகின்றனர்.
செம்மணி புதைகுழி விவகாரம் பெரிதும் பேசுபொருளாக காணப்படுகின்ற நிலையில், சர்வதேச விசாரணை மீதான எதிர்ப்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இலங்கையில் இனப்படுகொலை நடைபெறவில்லை தமிழ் மக்கள் கொல்லப்படவில்லை என அரசினால் தசாப்த காலமாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், அண்மையில் செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மற்றும் சிதிலங்கள் அரசுக்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், ஆணையாளர் வோல்கர் டர்க்கின் வருகை என்பது முக்கிய விடயமாக உற்றுநோக்கப்பட்டுள்ளது.இதேவேளை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த அவரிடம் மக்கள் நேரடியாக பல மஹஜர்களை கையளித்துள்ள நிலையில் நிச்சயம் இந்தவிடயம் குறித்து ஆராயப்படும் என மக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.