பல விருதுகளை வென்ற எழுத்தாளர் பூமணியின் ‘கசிவு’ என்ற நாவல் அதே பெயரில் படமாகி இருக்கிறது.
இந்த படத்தில் தேசிய விருது வென்ற எம் எஸ் பாஸ்கர், விஜயலட்சுமி ஹலோ கந்தசாமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தை செண்பகவள்ளி இயக்க வெற்றிச்செல்வன் தயாரித்துள்ளார்.
கசிவு படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் விருதுகளை அள்ளியுள்ளதோடு தற்போது நேரடியாக ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கிறது.
இந்த நிலையில் சென்னையில் நடந்த கசிவு திரைப்பட விழாவில் பேசிய எம் எஸ் பாஸ்கர்,
‘ஆதாயத்திற்காகவும் நடிக்க வேண்டும் ஆத்ம திருப்திக்காகவும் நடிக்க வேண்டும் அப்படி ஆத்ம திருப்திக்காக நடித்த படம் தான் கசிவு.
இப்படிப்பட்ட படம் பார்ப்பதால் எல்லோரும் திருந்திவிட முடியாது எவ்வளவோ சட்டதிட்டங்கள் வந்துவிட்டாலும் குற்றங்கள் அதிகமாக தான் நடக்கின்றன.
எனக்கு இதுபோல நல்ல கதாபாத்திரங்கள் தாருங்கள் என் நடிப்பை இன்னும் மெருகேற்றிக் கொள்கிறேன். எழுத்தாளர் பூமணியின் எழுத்துக்களை பேசி நடித்ததே எனக்கு இன்னொரு தேசிய விருது கிடைத்தது போல தான் என குறிப்பிட்டுள்ளார்.

