ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைவராக இருந்தபோது ரஜத் படிதார் பயன்படுத்திய மொபைல் இலக்கம் 90 நாட்களுக்கும் மேலாக செயல்படாமல் இருந்துள்ளது. இதனால் அவரது இலக்கத்தை தொலைத்தொடர்பு வழங்குநர் செயலிழக்க செய்துள்ளார்.பின்னர் அந்த சிம்மை மீண்டும் வேறு ஒருவருக்கு ஒதுக்கியுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் கரியாபந்த் மாவட்டத்தைச் சேர்ந்த மணீஷ் என்பர் இந்த நம்பரை வாங்கி தனது நண்பர் கேம்ராஜ் உதவியுடன் ஆக்டிவேஷன் செய்து, வாட்ஸ்அப் ஓபன் செய்துள்ளனர். அதில் வாட்ஸ்அப் புரோபைல் படமாக படிதாரின் புகைப்படம் தோன்றுவதைக் கவனித்தனர். இருப்பினும் அதனை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
சிறிது நேரத்திலேயே அது படிதார் என நினைத்து விராட் கோலி மற்றும் ஏபிடி வில்லியர்ஸ் உள்ளிட்ட கிரிக்கெட் சமூகத்தில் உள்ள முக்கிய நபர்களிடமிருந்து தொலைபேசி அழைப்புக்கள் வர தொடங்கியுள்ளன.இதனை நகைச்சுவையாக எடுத்து கொண்ட மனிஷ் அழைப்புக்களுக்கு நையாண்டி தனமாக பதில் வழங்கியுள்ளார்.
நிலைமை மோசமானதை அறிந்த ரஜத் படிதார் மணீஷைத் தொடர்பு கொண்டு அந்த எண்ணின் முக்கியத்துவத்தை விளக்கினார். இருப்பினும் நிலைமை உணராத அந்த இளைஞர்கள் நகைச்சுவையாக “நான் எம்.எஸ். தோனி பேசுகிறேன்” என்று பதிலளித்துள்ளனர்.
இறுதியில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு மணிசுக்கு எச்சரித்த நிலையில் குறித்த சிம் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது.
எதார்த்தமாக மணீஷ் என்பவர் மேற்கொண்ட நடவடிக்கையால் முக்கிய பிரபலங்களுடன் பேச கிடைத்துள்ள இந்த சுவாரசிய விடயம் இப்பொழுது வைரலாகி வருகிறது.