ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டிற்கு அனைத்து எதிர்க்கட்சியில் உள்ள கட்சித் தலைவர்களையும் அழைக்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது.
செப்டம்பர் 6 ஆம் திகதி நடைபெறவிருக்கும் கட்சி மாநாட்டிற்கான கலந்துரையாடல் இன்று (31) காலை நடைபெற்றது.
இதில் எடுக்கப்பட்ட சில முன்மொழிவுகள் 3 ஆம் திகதி நடைபெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்திற்கு அனுப்பப்பட உள்ளது.
இதற்கமைய, ஏற்கனவே கட்சியை விட்டு வெளியேறிய நிலையில், கட்சி உறுப்பினர் பதவி நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் மீதான தடையை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முன்மொழிவு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்திற்கும் முன்மொழியப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சிசார்பிலான அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து கட்சி மாநாட்டில் அழைக்க உள்ளார்.
இந்த சூழ்நிலையில், இம்முறை நடைபெறவிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி மாநாடு வேறுபட்டதாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.