எஃப் 1’ தமிழ் ரீமேக்கில் நடிக்க தகுதியானவர் அஜித் என்று நரேன் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
விளையாட்டை மையப்படுத்திய படங்களின் திரைப்பட விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இந்தியாவில் இருந்து எஃப்1 ரேஸில் பங்கேற்ற நரேன் கார்த்திகேயன் கலந்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது உலகளவில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘எஃப் 1’ ஹோலிவுட் படத்தின் தமிழ் ரீமேக்கில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு நரேன் கார்த்திகேயன், “கண்டிப்பாக அஜித் தான். அதற்கு மிகவும் பொருத்தமாக இருப்பார். 50 வயதிலும் நிறையப் போட்டிகளிலும் பங்கேற்று வருகிறார். இந்த வயதிலும் கார் ரேஸ் மீதான ஆர்வம் அதிகரித்திருக்கிறது.அஜித் இந்தியாவில் மோட்டார் ஸ்போர்ட்ஸை பிரபலப்படுத்தி வருகிறார்.
தற்போது அவருடன் இணைந்து நானும் பயணிக்கிறேன். அவரும் நானும் 25 ஆண்டுகால நண்பர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.