பிரான்ஸை சேர்ந்த 33 வயது வாள்வீச்சு வீராங்கனையான யசோரா திபஸ் ஊக்கமருந்து சர்ச்சையில் இருந்து விடுதலையாகியுள்ளார்.
கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற ஊக்க மருந்து சோதனையில், தடைசெய்யப்பட்ட தசையை வளர்க்கும் ‘ஆஸ்டரின்’ என்பதை, யசோரா திபஸ் உட்கொண்டதாக உறுதி செய்யப்பட்டது.
எனினும் அவரது விளக்கத்தை ஏற்ற சர்வதேச வாள்வீச்சு கூட்டமைப்பு, 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள அனுமதி வழங்கியது.
பின்னர் உலக ஊக்கமருந்து தடுப்பு முகமை, யசோரா திபஸுக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும் என வாதாடியது. வழக்கை விசாரித்த சர்வதேச விளையாட்டு நீதிமன்றம், ‘தனது காதலர் ஆஸ்டரின் பயன்படுத்தியது தெரியாமல் அவரை முத்தமிட்டுள்ளார்.
முத்தமிடும் போது உமிழ்நீர் வழியாக ஊக்கமருந்து பரவும். அவர் தெரிந்தே ஊக்க மருந்து எடுக்கவில்லை’ என கூறி இந்த வழக்கிலிருந்து அவரை விடுவித்துள்ளது.