அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் கூடுதல் வரி விதிப்புகள், கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பதாக மிரட்டல் ஆகிய விடயங்களால் அமெரிக்க பொருட்களை புறக்கணிக்க முடிவு செய்துள்ளார்கள் கனேடியர்கள்.
ஆனால், விலை அதிகரிப்பு உள்ளிட்ட விடயங்கள் உள்நாட்டு பொருட்களை பெறுவதில் தடையாக இருப்பதாக கூறப்படுகிறது.
எனினும் தங்கள் நாட்டிலேயே தயாராகும் பொருட்களை வாங்கும் ஆர்வம் மக்களிடையே அதிகமாகி வருகிறது.
சமீபத்திய ஆய்வொன்றில் பங்கேற்ற கனேடியர்களில் 63 சதவிகிதம் பேர், தங்கள் உணவு எங்கிருந்து வருகிறது என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ளும் பட்சத்தில், அவற்றிற்கு அதிக விலை கொடுக்கவும் தயார் என்று கூறியுள்ளார்கள்.
இந்நிலையில் மக்களுடைய விருப்பம் மற்றும் அவர்களுடைய வாங்கும் தன்மை ஆகிய இரண்டு விடயங்களுக்குமிடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதற்காக, சில்லறை விற்பனையாளர்கள் விசேட முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர், உணவு உற்பத்தியாளர்கள் விலைகளைக் குறைக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளார்கள்.

