‘பேரடாக்ஸ்’ என்ற குறும்படத்தை தி செய்லர்மேன் பிக்சர்ஸ் சார்பில் கார்த்திகேயன் தயாரித்துள்ளார். பிரியா கார்த்திகேயன் இயக்கியுள்ள இதன் டிரெய்லரை இயக்குனர் சேரன், நடிகர்கள் சசிகுமார், பிரசன்னா, ஆரி அர்ஜுனன் ஆகியோர் வெளியிட்டனர்.
இந்த குறும்படம் குறித்துப் பேசிய இயக்குநர் பிரியா கார்த்திகேயன், “ஒரு மனிதனின் உளவியல் பற்றி இப்படம் அலசுகிறது. சராசரி வாழ்க்கையை வாழும் நாயகன், கொஞ்சம் கொஞ்சமாகத் தனது மனைவி மற்றும் குடும்பத்தை விட்டு விலகிச் செல்கிறான். இந்நிலையில் எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்கிறது. இதைத் தொடர்ந்து என்ன நடக்கிறது என்பது படம்” என்றார்.
இயக்குநரும் நடிகருமான சேரன், ‘பேரடாக்ஸ்’ குறும்படத்தில் பாடல் ஒன்றை எழுதியுள்ளார். இந்த படத்தில் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், மிஷா கோஷல் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.