அண்மையியல் அபுதாபிக்கு சென்ற எதிஹாட் ஏர்வேஸ் விமானம், பயணி ஒருவரால் ஏற்பட்ட சம்பவத்தினால் டொரோண்டோவிற்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று கனடா போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமானம் (ஜூலை 14) பிற்பகல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகருக்குப் புறப்பட்டு, பின்னர் திரும்பியுள்ளது என மத்திய அரச நிறுவனம் தெரிவித்துள்ளது.
12 மணி நேர விமானப் பயணம் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லாப்ரடோர் கடற்கரையின் கிழக்கே விமானம் திரும்பியதாக ஃபிளைட் தரவு காட்டுகிறது.
“இந்த சம்பவம் ஒரு நபர் நெருக்கடியில் இருந்ததால் ஏற்பட்டதாகவும், எந்த விமானக் கதவும் திறக்கப்படவில்லை என்றும் விசாரணையில் தெரியவந்தது. சம்பந்தப்பட்ட நபர் காவல்துறை மற்றும் துணை மருத்துவர்களுடன் பாதுகாப்பாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், இதன் விளைவாக எந்த உடல் காயங்களும் ஏற்படவில்லை” என்று தெரிவிக்கப்படுகிறது.
விமானத்தில் என்ன நடந்தது, டொராண்டோவிற்குத் திரும்புவதற்கு என்ன காரணம் என்று கனடா போக்குவரத்து துறையோ காவல்துறையோ அல்லது பீல் காவல்துறையோ கூறவில்லை என கனேடிய செய்திகள் தெரிவிக்கின்றன.