23-வது உலகக் கிண்ண கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது.
48 அணிகள் பங்கேற்கும் இந்த கால்பந்து விழாவுக்கு போட்டியை நடத்தும் நாடுகளை தவிர்த்து மற்ற அணிகள் தகுதி சுற்று மூலமே நுழைய முடியும்.
இந்த போட்டிக்கான தகுதி சுற்று கண்டங்கள் ரீதியாக நடந்து வருகிறது. இதில் ஆப்பிரிக்க கண்டத்துக்கான தகுதி சுற்று போட்டியில் பங்கேற்றுள்ள 53 அணிகள் 9 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் தலா 2 முறை மோதுகின்றன.
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் நேரடியாக உலகக் கோப்பைக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில் மொராக்கோ தலைநகர் ரபாத்தில் நடந்த ஆட்டம் ஒன்றில் மொராக்கோ அணி, நைஜரை (இ பிரிவு) எதிர்கொண்டது. இதில் தொடக்க முதலே ஆதிக்கம் செலுத்திய மொராக்கோ அணி 5-0 என்ற கோல் கணக்கில் நைஜரை பந்தாடியது.
தொடர்ச்சியாக 6 வெற்றிகளை குவித்து 18 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடத்தில் இருக்கும் மொராக்கோ அணி இன்னும் 2 ஆட்டங்கள் எஞ்சி இருக்கும் நிலையில் உலகக் கிண்ண வாய்ப்பை உறுதி செய்தது.