பிரம்மா இயக்கத்தில் ராதிகா பிரசிதா, சாய் ராஜ்குமார், பாவெல் நவகீதன், மாஸ்டர் அஜய் உள்ளிட்டோர் நடித்து 2015-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம், ‘குற்றம் கடிதல்’. இதன் அடுத்த பாகம் இப்போது உருவாகிறது. இதை ஜே.எஸ்.கே. பிலிம் கார்பரேஷன் மூலம் சதீஷ்குமார் தயாரித்து நடிக்கிறார். எஸ்.கே.ஜீவா இயக்குகிறார்.
பாண்டியராஜன், அப்பு குட்டி, பாலாஜி முருகதாஸ், தீபக், பாவல், பத்மன், பி.எல்.தேனப்பன், சாந்தினி தமிழரசன், கீர்த்தி சாவ்லா, விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். டி.கே.இசை அமைக்கிறார். சதீஷ்.ஜி ஒளிப்பதிவு செய்கிறார். த்ரில்லர் டிராமா வகையிலான இதன் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது.