ஈரானின் அணு ஆயுதம் உற்பத்தி தளங்களை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் முக்கியமான ராணுவ தளபதிகள், அணுசக்தி துறையில் ஈடுபட்டு வந்த விஞ்ஞானிகள் பலர் கொல்லப்பட்டனர்.
மேஜர் ஜெனரல் மொகம்மது பஹெரி, கமாண்டர் உசைன் சலாமி, அணுசக்தி விஞ்ஞானி மொகம்மது மெஹ்தி டெஹ்ரான்சி உட்பட முக்கிய நபர்கள் பலர் உயிரிழந்தனர்.
தற்போது போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்த ராணுவ கமாண்டர்கள், விஞ்ஞானிகளின் உடல்களுக்கு நேற்று அரச மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது.
தலைநகர் டெஹ்ரானில் நேற்று காலை இறுதிச் சடங்கு ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்தவர்களை கவுரவிக்கும் வகையில் ஊர்வலம் நடைபெற்றதாக ஈரான் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.