14.6 C
Scarborough

உசேன் போல்ட்டின் தந்தை காலமானார்!

Must read

ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த மின்னல் வேக ஓட்ட வீரரான உசேன் போல்டின் தந்தை வெல்ஸ்ஸி போல்ட் உடல்நலக் குறைவு ஏற்பட்டு காலமானதாக ஜமைக்கா ஒப்ஸவர் செய்தி வெளியிட்டுள்ளது.

எட்டு முறை ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றவரான உசேன் போல்ட், உலகின் “மின்னல் வேக மனிதன்” என அறியப்படுகின்றார்.

இவரின் தந்தையான வெல்ஸ்ஸி போல்ட், கடந்த சில நாட்களாக சுகவீனமுற்றிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை (31) உயிரிழந்துள்ளார்.

உசேன் போல்ட்டின் தந்தையான வெல்ஸ்ஸி போல்ட், ஜமைக்காவின் ரேலெவ்னி நகரில் உள்ள ஷெர்வூட் கொன்டென்ட் எனும் கிராமத்தில் பலசரக்குக் கடையொன்றை நடத்தி வந்துள்ளார்.

உசேன் போல்ட் உலகம் கொண்டாடும் ஓட்ட வீரனாக திகழ்வதற்கு வெல்ஸ்ஸி போல்ட் முக்கிய காரணகர்த்தாவாக இருந்துள்ளார்.

2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 100 மீற்றர் ஓட்டத்தில் உசேன் போல்ட் முதலாவது தங்கப்பதக்கத்தை பெற்றது உள்ளிட்ட முக்கிய சம்பியன்ஷிப் போட்டிகளில் அவரது தந்தை வெல்ஸ்ஸியும் அவரது மனைவியான ஜெனிஃபரும் உடனிருந்துள்ளனர்.

மிகவும் எளிமையான குடும்பத்திலிருந்து வந்தவரான உசேன் போல்ட், உலகப் புகழ்பெற, அவரது தந்தையான வெல்ஸ்ஸி போல்ட் முக்கியமானவராக இருந்து, தன் மகனின் வெற்றிக்காக பெருமளவு கஷ்டங்களை சுமந்தவர் என உசேன் போல்ட்டின் இரசிகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

வெல்ஸ்ஸி போல்ட்டுக்கு உசேன் போல்ட்டுடன் சாதிகி மற்றும் கிறிஸ்டின் போல்ட்-ஹில்டன் என இரு மகன்மார்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article