உக்ரைன் நாட்டின் மிகப் பெரிய போர்க்கப்பலை, ட்ரோன் மூலம் ரஷ்யா தகர்த்தள்ளதாகவும் இதில் உக்ரைன் வீரர் ஒருவர் உயிரிழந்ததோடு பலர் காயம் அடைந்தனர் எனவும் ரஷ்ய செய்திகள் வெளியாகியுள்ளன.
இதேநேரம் இந்த தாக்குதலில் காணாமல் போனோரை தேடி வருவதாக உக்ரைன் கடற்படை தெரிவித்துள்ளது.
உக்ரைனில் உள்ள கட்டிடங்கள் மற்றும் ட்ரோன் தயாரிப்பு நிலையங்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தி வந்த ரஷ்யா, தற்போது உக்ரைன் போர்க்கப்பல்களை குறிவைத்து தாக்குதலை தொடங்கியுள்ளது.
2021-ம் ஆண்டு உக்ரைன் கடற்படையில் இணைக்கப்பட்ட மிகப் பெரிய போர்க்கப்பலான ‘சிம்ஃபெரோபோல்’ உக்ரைனின் டனுபே ஆற்றை கடந்து சென்றபோது, அதன் மீது ரஷ்யா, ‘ஷீ ட்ரோன்’ மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் உக்ரைனின் சிம்ஃபெரோபோல் வெடித்து சிதறியது. உக்ரைன் போர்க்கப்பலை, ஷீ ட்ரோன் மூலம் ரஷ்யா வெற்றிகரமாக தாக்கியது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் உக்ரைன் வீரர் ஒருவர் உயிரிழந்தோடு பலர் காயம் அடைந்துள்ளனர்.மேலும் காணாமல் போன வீரர்களை தேடும் பணி நடைபெறுவதாக உக்ரைன் கடற்படை தெரிவித்துள்ளது. இந்தக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டதாக ரஷ்ய ராணுவ அமைச்சு தெரிவித்துள்ளது.
ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முயற்சி எடுத்தார். எனினும் ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீதான ரஷ்ய தீவிரப்பப்டுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார்.