அமெரிக்காவை ஈரான் தாக்கினால் இதற்கு முன் கண்டிராத அளவுக்கு மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். ஈரான் மீதான தாக்குதலுக்கும், அமெரிக்காவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்-ஈரான் இடையே மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. இரு நாடுகளும் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் இருப்பதாக சொல்லப்படும் நிலையிலேயே, ‘இஸ்ரேல் தாக்குதலில் அமெரிக்காவிற்கு எந்தவித பங்கு இல்லை என அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எந்த வகையிலும், வடிவிலும் ஈரான் தாக்கினால் அமெரிக்க ஆயுதப் படை முழு பலத்துடன் களமிறங்கும். இருப்பினும், ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் ஒரு ஒப்பந்தத்தை எளிதாகச் செய்து, இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர முடியும்” என டிரம்ப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.