காசா நகரத்தை ஆக்கிரமிக்கும் இஸ்ரேலின் திட்டமானது, இரு நாடுகள் தீர்வு காண்பதற்கான நம்பிக்கையை அழிக்கும் செயலாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை காசா நகரத்தைக் கைப்பற்றும் நோக்கத்தை அறிவித்ததைத் தொடர்ந்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.
“இஸ்ரேல் காசாவை கைப்பற்றினால், அது வெறும் நிலத்தைப் பற்றியது மட்டுமல்ல – இரு நாடுகள் தீர்வுக்காக உயிர்ப்புடன் வைத்திருக்கும் நம்பிக்கையையும் அது உடைத்துவிடும்.
இந்தக் கொள்கையினால் ஒரு காலத்தில் ஒற்றுமையாக இருந்த நாடுகள் பிரிந்து செல்லத் தொடங்கும். அந்த நம்பிக்கை உடைந்தவுடன், அமைதி கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகிவிடும்,” என்று பிரேமதாச X தள பதிவொன்றின் ஊடாக கூறினார்.
இஸ்ரேலின் இந்த நடவடிக்கை இலங்கை உட்பட பல அரசாங்கங்களிடமிருந்து விமர்சனங்களை பெற்றுள்ளது, பல நாடுகளும் “ஆழ்ந்த கவலையை” வெளிப்படுத்தியதோடு உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.