முல்லைத்தீவில் இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் மாயமான நபர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் ஐந்து இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட நீதவானின் உத்தரவுக்கமைய குறித்த இளைஞனின் உடல் உடற்கூற்று பரிசோதனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
அண்மையில் இராணுவ முகாமிற்கு சென்றதில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதுடன் மற்றுமொரு நபருக்கு முதுகு பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பில் ஒட்டிசுட்டான் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்ற நிலையில் ஐந்து இராணுவ அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.