இலங்கை -ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி போட்டி ஹராரேவில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் நாணய சுழட்சியில் வென்ற இலங்கை பந்துவீச்சைதெரிவு செய்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஜிம்பாப்வேயின் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கர்ரன் அரைசதம் அடித்து அசத்தினார்.
அவருடன் ஜோடி சேர்ந்த சிக்கந்தர் ராசாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பென் கர்ரன் 79 ஓட்டங்கள் அடித்த நிலையில் விக்கட்டினை இழந்தார்.அதனை தொடர்ந்து ராசா, கிளைவ் மடாண்டே இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதன் மூலம் ஜிம்பாப்வே அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 277 ஓட்டங்கள் அடித்துள்ளது. சிக்கந்தர் ராசா 59 ரன்களுடனும், ரிச்சர்ட் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இலங்கை தரப்பில் சமீர 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 278 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை களம் இறங்கி உள்ளது.
இலங்கை அணி 10 ஓவர்களில் 48 ஓட்டங்களை பெற்று ஒரு விக்கட்டை இழந்துள்ளது.