இலங்கை கிரிக்கெட் சபை நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாக வெளியான செய்திகள் பொய்யானவை மற்றும் ஆதாரமற்றவை என்று இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
ஐ.சி.சி போட்டியை நடத்த இலங்கை தயாராக இருப்பதாக அந்த அமைப்பு அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு இந்தியாவுடன் இணைந்து உலகக் கோப்பையை நடத்தவும், இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கையில் 11 ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளை நடத்தவும் இலங்கை கிரிக்கெட் தீவிரமாகத் தயாராகி வருகிறது.
எனவே, நிதி நெருக்கடி இருப்பதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் தவறானவை என்று இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தனது செயல்பாடுகளை நிர்வகிக்கவும், நீண்டகால மூலோபாய முயற்சிகளை செயல்படுத்தவும் போதுமான நிதி நிலைத்தன்மையைக் கொண்டுள்ளது என்று அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.