இலங்கை உடனான ஆசியக் கிண்ண 2025 சூப்பர் ஃபோர் போட்டியில் இந்தியா சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.
இலங்கை – இந்தியா இடையேயான ஆசியக் கிண்ண 2025 சூப்பர் ஃபோர் போட்டி நேற்று வெள்ளிக்கிழமை டுபாயில் நடைபெற்றது.
இந்த போட்டியில் இரு அணிகளும் 20 ஓவர்கள் முடிவில் 202 ஓட்டங்கள் எடுத்த நிலையில், இரு அணிகளும் இரண்டாவது முறையாக சூப்பர் ஓவருக்கு அனுப்பப்பட்டன.
எனினும், இலங்கை அணி , சூப்பர் ஓவரில் வெறும் இரண்டு ரன்களுக்கு சகல விக்கட் வாய்ப்புகளையும் இழந்தது. இதனால் இந்தியா இலக்கை எளிதாகத் துரத்தி வெற்றியை உறுதி செய்தது.
பெத்தும் நிஸ்ஸங்க இலங்கை அணியின் நட்சத்திர வீரராக இருந்தார், அதிக ஸ்கோர்கள் கொண்ட போட்டியில் தனது முதல் டி20 சர்வதேச சதத்தைப் பதிவு செய்தார்.
அவர் 52 பந்துகளில் 107 ஓட்டங்களை பெற்று பல சாதனைக்கு சொந்தக்காரரானார். அவரது இன்னிங்ஸ் இலங்கைக்கு வலுவான தளத்தை அளித்தது, ஆனால் இறுதி ஓவர்களில் இலங்கையணி வீரர்கள் தடுமாற்றத்தில் ஸ்கோரை சமன் செய்தனர்.
இந்நிலையில் சூப்பர் ஓவரில் இந்தியா
வெற்றியை தனதாக்கியுள்ளது.

